செய்திகள்

22 வயது இளம் பெண்ணை காதலிக்கும் 45 வயது ஹாலிவுட் நடிகர்!

நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ ஆஸ்பனில் தன் புதிய காதலி கமிலா மோரோனுடன் என்பவருடன் கடைத்தெருக்களில் காணப்பட்டார்.

IANS

நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ ஆஸ்பனில் தன் புதிய காதலி கமிலா மோரோன் என்பவருடன் கடைத்தெருக்களில் காணப்பட்டார். ரசிகர்களின் கவனத்தை தவிர்க்க டிகாப்ரியோ தன் அடையாளத்தை மறைத்து சென்றுள்ளார். 

அவர் அணிந்திருந்த உடை ஹூடி வடிவமைப்பிலுள்ளது. பேஸ்பால் தொப்பி மற்றும் கருப்பு கோட் அணிந்திருந்த இந்த 45 வயதான நடிகர் கொலராடோவின் ஆஸ்பனில் உள்ள மாட்சுஹிசாவில் தனது 22 வயது காதலியும், நண்பர்களுடனும் இரவு உணவை முடித்து விட்டு ரகசியமாக வெளியேறினார் என்று டெய்லிமெயில் இணையதளம் தெரிவித்துள்ளது.

இதற்கு முந்தைய நாள், இந்த ஜோடி டிகாப்ரியோவின் நெருங்கிய நண்பர், 43 வயதான நடிகர் லூகாஸ் ஹாஸுடன் பிரபல கடைகளுக்கு ஷாப்பிங் சென்று மகிழ்ந்தனர். 

45 வயதான டிகாப்ரியோ தான் அணிந்திருந்த ஹூடியை தலைக்கு மேல் இழுத்து மூடி, முக அடையாளத்தை மறைத்திருந்தார்.  மேலும் அவர் ஒரு தொப்பியை அணிந்திருந்தார்.

மறைந்து செல்ல ஏற்ற வகையில், அவர் அணிந்திருந்த தோல் ஜாக்கெட், கால்சட்டை மற்றும் காலணி உள்ளிட்ட அனைத்தும் கருப்பு நிறத்தில்  அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை உறுதி: தேஜஸ்வி யாதவ் மீண்டும் வாக்குறுதி

ஆப்கன் வெளியுறவு அமைச்சர் முத்தாகியின் ஆக்ரா வருகை ரத்து

தீராநதி... பூனம் பாஜ்வா!

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய இருவர் யார்?

மயிலழகு... பிரனிதா சுபாஷ்!

SCROLL FOR NEXT