செய்திகள்

பேருந்துகளைக் கொளுத்தும் உரிமையை உங்களுக்கு யார் தந்தது?: குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்களுக்கு நடிகை கங்கனா எதிர்ப்பு!

நம் நாட்டில் 3-4 சதவீத மக்கள் தான் வருமான வரி செலுத்துகிறார்கள். மற்றவர்கள், அவர்களைச் சார்ந்து உள்ளார்கள்...

எழில்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து தற்போது நாட்டில் நடைபெற்றும் வரும் தொடா் போராட்டங்களுக்கு பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கங்கனா கூறியதாவது: 

நம் நாட்டில் 3-4 சதவீத மக்கள் தான் வருமான வரி செலுத்துகிறார்கள். மற்றவர்கள், அவர்களைச் சார்ந்து உள்ளார்கள். எனவே பேருந்துகள், ரயில்களைக் கொளுத்தி, அமளி ஏற்படுத்தும் உரிமையை உங்களுக்கு யார் தந்தது? ஒரு பேருந்தை வாங்கும் செலவு மிக அதிகம். ஊட்டச்சத்துக் குறைபாட்டால் நம் நாட்டில் பலர் இறக்கும் அளவுக்கு நம் நாட்டின் நிலை உள்ளது. ஜனநாயகம் என்கிற பெயரில் வன்முறையை மக்கள் தூண்டிவிடக் கூடாது. சுதந்திரத்துக்கு முன்பான காலக்கட்டங்களில் தான் நாம் இன்னும் வாழ்கிறோம். அப்போது, வரி கட்டாமல் எதிர்ப்பு தெரிவிப்பது, போராட்டம் செய்வது போன்றவை ஏற்புடையதாக இருந்தன. இன்று ஜனநாயக முறையால் இத்தாலி, ஜப்பானில் இருந்து அல்ல, உங்களிடமிருந்துதான் தலைவர்கள் உருவாகிறார்கள் என்று கூறியுள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சுயசரிதைத் திரைப்படத்தில் அவருடைய கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். தலைவி என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை மதராசப்பட்டினம், தலைவா, தெய்வத் திருமகள் உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர் விஜய், இருமொழிகளிலும் (தமிழ், ஹிந்தி) இயக்குகிறார். இத்திரைப்படத்தின் கதையை பாகுபலி, மணிகர்னிகா திரைப்படங்களின் கதாசிரியரும், இயக்குநர் ராஜமெளலியின் தந்தையுமான கே.வி.விஜயேந்திர பிரசாத் எழுதுகிறார். விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் ஆர்.சிங் ஆகியோர் தயாரிக்கின்றனர். இசை - ஜி.வி. பிரகாஷ். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெயலலிதா பிறந்த நாள்: அதிமுகவினா் அன்னதானம், நல உதவி

உலக தாய்மொழி தின வில்லிசை நிகழ்ச்சி

அறிவுக் கருவூலத்தின் திறவுகோல்!

ஸ்பெயினிடம் ஷூட் அவுட்டில் தோல்வி கண்டது இந்தியா

அனைவருக்குமான வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா் பிரதமா் மோடி - மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

SCROLL FOR NEXT