முகப்பு
செய்திகள்

தமிழை விடவும் அதிக வரவேற்பு பெற்றுள்ள ஹிந்தி தர்பார் டிரெய்லர்!

தர்பார் படம் ஜனவரி 9 அன்று தமிழ், ஹிந்தி, தெலுங்கில் வெளிவரவுள்ளது. தமிழை விடவும் ஹிந்தி தர்பார் டிரெய்லர்க்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:44 PM
பகிர்:

சர்கார் படத்தையடுத்து ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன். இசை - அனிருத். தயாரிப்பு - லைகா நிறுவனம். இது ரஜினியின் 167-வது படம்.

ரஜினியின் ஜோடி - நயன்தாரா. இந்தப் படத்தில் காவல் அதிகாரியாக நடித்துள்ளார் ரஜினி. தர்பார் படத்தின் வில்லன் - பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி.

தர்பார் படம் ஜனவரி 9 அன்று தமிழ், ஹிந்தி, தெலுங்கில் வெளிவரவுள்ளது. தமிழை விடவும் ஹிந்தி தர்பார் டிரெய்லருக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. டிசம்பர் 30 மதியம் வரை ஹிந்தி தர்பாருக்கு 1 கோடி 69 லட்சம் பார்வைகளும் தமிழ் டிரெய்லருக்கு 1 கோடியே 29 லட்சம் பார்வைகளும் தெலுங்கு டிரெய்லருக்கு 30 லட்சத்து 21 ஆயிரம் பார்வைகளும் கிடைத்துள்ளன.

இந்நிலையில் ஒரு பேட்டியில் தர்பார் டிரெய்லர் பட டிரெய்லர் பற்றி பேசியுள்ளார் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ். ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: தமிழில், டிரெய்லர் இல்லாவிட்டாலும் ரஜினி படத்துக்கேற்ற வரவேற்பு தானாகக் கிடைத்துவிடும். எங்களுடைய இலக்கு ஹிந்தி ரசிகர்கள் தாம். தென்னிந்திய படங்களில் சண்டைக் காட்சிகள் அதிகமாக இருந்தால் தான் ஆரம்பத்தில் நல்ல வசூல் கிடைக்கும் என்றொரு கருத்து உள்ளது. எனவே மும்பையைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் தர்பார் டிரெய்லரைத் தயாரிக்கச் சொன்னோம் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.