முகப்பு
செய்திகள்

ரஜினியின் தர்பார் படத்துக்குத் தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

தர்பார் படத்துக்குத் தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Updated On : 30 டிசம்பர், 2019 at 4:14 PM
பகிர்:

சர்கார் படத்தையடுத்து ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன். இசை - அனிருத். தயாரிப்பு - லைகா நிறுவனம். இது ரஜினியின் 167-வது படம்.

ரஜினியின் ஜோடி - நயன்தாரா. இந்தப் படத்தில் காவல் அதிகாரியாக நடித்துள்ளார் ரஜினி. தர்பார் படத்தின் வில்லன் - பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி.

தர்பார் படம் ஜனவரி 9 அன்று தமிழ், ஹிந்தி, தெலுங்கில் வெளிவரவுள்ளது.

Advertisement

இந்நிலையில் தர்பார் படத்துக்குத் தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

2.0 படத்தைத் தயாரிக்க ரூ. 12 கோடியை ஆண்டுக்கு 30% வட்டியுடன் கடனாகப் பெற்றது லைகா நிறுவனம். ஆனால், பணத்தைத் திருப்பித் தராததால் வட்டியுடன் சேர்த்து ரூ. 23.70 கோடி வழங்கும் வரை தர்பார் பட வெளியீட்டுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று மலேசிய நிறுவனம் டி.எம்.ஒய். கிரியேஷன்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

இதையடுத்து ஜனவரி 2-ம் தேதிக்குள் பதில் அளிக்க லைகா நிறுவனத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.