செய்திகள்

இதை விடவும் சிறந்த பத்தாண்டுகளை எதிர்பார்க்க முடியாது: தனுஷ்

எழில்

கடந்த பத்தாண்டுகளும் தனக்குச் சிறப்பாக அமைந்ததாக நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.

தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

இந்த தசாப்தம் எனக்கு மிகசிறப்பாக அமைந்தது. எனக்கு அனைவரும் நன்கு உற்சாகம் அளித்தீர்கள். உங்களால் தான் அனைத்துச் சவால்களையும் எதிர்கொண்டேன்.

இந்த தசாப்தம், தேசிய விருதுடன் தொடங்கியது. நான் படம் இயக்கினேன், பிறகு அசுரனுடன் முடிந்தது. எனக்குப் பிடித்த பல படங்களில் நடித்தேன். ஒரு நடிகராக இதை விடவும் சிறந்த பத்தாண்டுகளை எதிர்பார்க்க முடியாது என்று கூறியுள்ளார்.

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள பட்டாஸ் படம் ஜனவரி 16 அன்று வெளிவருகிறது. பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிக் கவனம் பெற்ற இயக்குநர் மாரி செல்வராஜின் அடுத்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் தனுஷ். பேட்ட படத்துக்குப் பிறகு தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

சத்தீஸ்கா் காங். செய்தித் தொடா்பாளா் கட்சியிலிருந்து விலகல்

பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவன் சாருக்கு சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT