முகப்பு
செய்திகள்

ஹிந்திப் பட விளம்பர நிகழ்சிக்குத் தமிழ் எழுத்துகள் கொண்ட புடைவையை உடுத்தி கவனம் ஈர்த்த பிரபல ஹிந்தி நடிகை!

இந்த உடையை வடிவமைத்தவர், பிரபல ஆடை வடிவமைப்பாளர் மசாபா குப்தா...

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:02 AM
பகிர்:

Ek Ladki Ko Dekha Toh Aisa Laga என்கிற ஹிந்திப் படம் இன்று வெளியாகியுள்ளது. அனில் கபூர், ஜுஹி சாவ்லா, சோனம் கபூர் போன்றோர் நடித்துள்ள இந்தப் படத்தை ஷெல்லி சோப்ரா இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை சோனம் கபூர், தமிழ் எழுத்துகளைப் பொறித்த புடைவையை அணிந்து வந்து கவனம் ஈர்த்துள்ளார். இந்த உடையை வடிவமைத்தவர், பிரபல ஆடை வடிவமைப்பாளர் மசாபா குப்தா. இந்தப் புடைவையின் விலை ரூ. 22,000 என்று அறியப்படுகிறது. 

எனினும் படத்தின் பெயரைத் தமிழில், ஏக் லட்கி கோ தேக்கா தோ ஏசா லகா என எழுதுவதற்குப் பதிலாக ஏக் லடக்கி கோ தேக்கா தொ ஏசா லகா எனத் தவறாக எழுதியுள்ளார்கள். இதைச் சமூகவலைத்தளங்களில் பலர் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.