FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ராமாயணா - யஷ், சாய் பல்லவி கிளிம்ஸுக்கு காத்திருக்கும் ரசிகர்கள்!

யஷ், சாய் பல்லவி கிளிம்ஸ் குறித்து...

Updated On : 2 ஏப்ரல் 2026, 3:57 pm IST
யஷ், சாய் பல்லவி - youtube
பகிர்:

ராமாயணா திரைப்படத்திற்கான ரன்பீர் கபூர் விடியோ பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இயக்குநர் நித்திஷ் திவாரி இயக்கத்தில் நடிகர்கள் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் ராமாயணம் உருவாகி வருகிறது. இரண்டு பாகமாக உருவாகும் படத்தின் முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில் ராமனாக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி, ராணவனாக யஷும் நடித்து வருகின்றனர். இதன் கிளிம்ஸ் விடியோ வெளியாகி ஆச்சரியப்படுத்திய நிலையில், ராமராக நடித்த ரன்பீரின் அறிமுக விடியோவை இன்று வெளியிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

மிகப் பிரம்மாண்டமான விஎஃப்எக்ஸ் வேலைப்பாடுகள், கம்பீரமான ரன்பீர் தோற்றம், பின்னணி இசை என அனைத்தும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ராமாயணாவுக்கு உருவாகியுள்ளது.

ரன்பீரின் விடியோ கொடுத்த தாக்கத்தால் ராவணனான யஷ் மற்றும் சீதாவான சாய் பல்லவியின் கிளிம்ஸுக்காகவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இன்று வெளியான டீசரில் புஷ்பக விமானம் ஒன்று இடம்பெறுகிறது. அதன் பிரம்மாண்டமே விஎஃப்எக்ஸ் தரத்தைக் காட்டுவதால் ராமாயணா உலகளவில் கவனிக்கப்படும் என ஊகிக்கப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு ஆஸ்கர் வென்ற இசையமைப்பாளர்களான ஹான்ஸ் சிம்மர் மற்றும் ஏ. ஆர். ரஹ்மான் ஆகியோர் இசைமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

summary

fans waits for ramayana yash and sai pallavi glimpse

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments