செய்திகள்

விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படத்துக்கு வித்தியாசமான பாணியில் இசையமைக்கவுள்ள இளையராஜா!

கமல் இயக்கிய ஹே ராம் படத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளுக்குத்தான் பாடல்கள் உருவாக்கினார் இளையராஜா... 

எழில்

யுவன் ஷங்கர் ராஜாவின் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படத்தை இயக்கி முடித்துள்ளார் சீனு ராமசாமி. தென்மேற்குப் பருவக்காற்று, தர்மதுரை, இடம் பொருள் ஏவல் என சீனு ராமசாமி இயக்கிய மூன்று படங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இருவரும் இணைந்துள்ள நான்காவது படமிது.

இப்படத்துக்கு இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா ஆகிய இருவரும் இணைந்து இசையமைக்கவுள்ளார்கள்.  

இந்நிலையில் மாமனிதன் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் எடுக்கப்பட்டுள்ள காட்சிகளுக்குப் பாடல்களும் பின்னணி இசையும் இளையராஜா எப்படி அமைத்துத் தரப்போகிறார் என ஆவலாக உள்ளேன் என்று இயக்குநர் சீனு ராமசாமி ட்வீட் செய்துள்ளார்.

கமல் இயக்கிய ஹே ராம் படத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளுக்குத்தான் பாடல்கள் உருவாக்கினார் இளையராஜா. அதேபோல இந்தப் படத்திலும் முழுப்படமும் படமாக்கப்பட்ட பிறகு பாடல்களை உருவாக்கவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கையை ஸ்டாலின் வெளியிட்டார் | செய்திகள்: சில வரிகளில் | 8.8.25

அன்புமணி - ராமதாஸ் தரப்பு விசாரணை நிறைவு

ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!

28 ஆண்டுகள் கழித்து மீண்டும் திரையில் டிஸ்கோ சாந்தி!

தொடர்ச்சியாக ரன்கள் குவித்த ரவீந்திர ஜடேஜாவுக்கு பார்த்திவ் படேல் பாராட்டு!

SCROLL FOR NEXT