செய்திகள்

அமேஸான் பிரைமில் திங்களன்று ‘விஸ்வாசம்’ வெளியீடு!

படம் வெளிவந்த 46-வது நாளன்று இணையத்தில் வெளியாவதால் திரையரங்கில் படம் பார்க்காதவர்களுக்கு...

எழில்

அஜித் - சிவா ஆகிய இருவரும் மீண்டும் இணைந்துள்ள படம் - விஸ்வாசம். கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்த இப்படத்தில் ஜகபதி பாபு, விவேக், யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, கோவை சரளா போன்றோரும் நடித்துள்ளார்கள். இப்படத்துக்கு இசை - இமான், ஒளிப்பதிவு - வெற்றி. இந்தப் படம்  ஜனவரி 10-ம் தேதி வெளியானது. 

இந்நிலையில் விஸ்வாசம் படம் அமேஸான் பிரைமில் வரும் திங்களன்று (பிப்ரவரி 25) வெளியாகவுள்ளது. படம் வெளிவந்த 46-வது நாளன்று இணையத்தில் வெளியாவதால் திரையரங்கில் படம் பார்க்காதவர்களுக்குத் தற்போது படம் பார்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. 

வீடியோ ஸ்ட்ரீமிங் மூலமாகப் படங்கள் மற்றும் இணையத் தொடர்களைப் பார்க்க வசதியை ஏற்படுத்தித் தருகிறது அமேஸான் பிரைம் செயலி. இதற்கென தனிக்கட்டணங்கள் உண்டு. டெஸ்க்டாப் கணினி, ஸ்மார்ட்போன், டேப்ளெட் பிசி போன்றவற்றைப் பயன்படுத்தி அமேஸான் பிரைம் விடியோக்களைக் காணமுடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கைக்கு எதிரான தொடரை முழுமையாக (3-0) வென்றது பாகிஸ்தான்!

எடப்பாடி பழனிசாமியுடன் பேசியது என்ன? - ஜி.கே.வாசன் பேட்டி!

உண்மையான அன்பு... பிக் பாஸிலிருந்து வெளியேறிய திவாகரின் வைரல் விடியோ!

ரஜினிக்கு நடிக்க கற்றுக்கொடுத்த ஆசிரியர் மறைவு!

தமிழகக் கடலோர மாவட்டங்களில் மழை தொடங்குவது எப்போது?

SCROLL FOR NEXT