செய்திகள்

நடிகர் தாடி பாலாஜி மீது காவல் நிலையத்தில் மனைவி புகார்

தினமணி

திரைப்பட நடிகர் தாடி பாலாஜி மீது அவரது மனைவி காவல் நிலையத்தில் புதன்கிழமை புகார் அளித்துள்ளார்.  

திரைப்பட நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி. இவரது மனைவி நித்யா (32). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். நித்யா தனது மகளுடன் மாதவரம், சாஸ்திரி நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் தாடி பாலாஜிக்கும், நித்யாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு மாதவரம் காவல் நிலையத்தில் புகார் பதிவாகி உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நித்யா சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாலாஜி மீது புகார் அளித்து இருந்தார். இந்நிலையில், நித்யா மாதவரம் காவல் நிலையத்தில் புதன்கிழமை, தனது கணவர் தாடி பாலாஜி தனக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகவும், கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும், அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்தார்.

இதுகுறித்து, மாதவரம் காவல் ஆய்வாளர் செல்வகுமார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போடியில் பலத்த மழை

கம்பம் சித்திரைத் திருவிழாவில் திமுகவினா் நீா்மோா் விநியோகம்

சித்திரைத் திருவிழா: மலா் அங்கி அலங்காரத்தில் கெளமாரியம்மன்

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க விழிப்புணா்வு பிரசாரம்

குறுகிய கால பயறு வகைகளை சாகுபடி செய்யலாம்

SCROLL FOR NEXT