15 வருடங்களுக்குப் பிறகு தமிழில் மீண்டும் நடிக்கவுள்ள அஜித் பட நாயகி!
மஹத், யாஷிகா நடிப்பில் உருவாகவுள்ள இந்தப் படம் தமிழ், கன்னடம் என இரு மொழிகளிலும் உருவாகவுள்ளது...
ராஜா, காதல் சடுகுடு போன்ற படங்களில் நடித்த பிரியங்கா திரிவேதி கடைசியாக 2004-ல் அருண் விஜய்க்கு ஜோடியாக ஜனனம் படத்தில் நடித்தார். அதன்பிறகு அவர் தமிழ்ப் படங்களில் நடிக்கவில்லை. 2003-ல் கன்னட நடிகர் உபேந்திராவைத் திருமணம் செய்துகொண்டு பிரியங்கா உபேந்திரா எனப் பெயர் மாற்றம் கொண்டார்.)
இந்நிலையில் 15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ்ப் படமொன்றில் நடிக்கவுள்ளார் பிரியங்கா.
மஹத், யாஷிகா நடிப்பில் அறிமுக இயக்குநர்கள் மாக்வென் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படம் தமிழ், கன்னடம் என இரு மொழிகளிலும் உருவாகவுள்ளது.