பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் ராதா கிருஷ்ணா இயக்கியுள்ள படம் - மணிகர்ணிகா. ஜான்சி ராணி லட்சுமிபாயின் கதையே மணிகர்ணிகா என்கிற படமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஜனவரி 25 அன்று படம் வெளிவரவுள்ளது.
ஜான்சி ராணியின் இயர்பெயர் - மணிகர்ணிகா. இந்திய விடுதலைப் போரில் முக்கியப் பங்காற்றிய ஜான்சி ராணி, ஆங்கிலேயருக்கு எதிரான போரில் வீர மரணம் அடைந்தார். அப்போது அவருக்கு வயது - 29.
இப்படத்துக்கு இசை - ஷங்கர் - இஷான் - லாய். பாகுபலி படங்களின் கதாசிரியரான விஜயேந்திர பிரசாத் இப்படத்துக்குக் கதை, திரைக்கதை அமைத்துள்ளார்.
இந்தப் படம் ஹிந்தியில் வெளியாவதோடு டப் செய்யப்பட்டு தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் அதே நாளில் வெளியிடப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.