முகப்பு
செய்திகள்

ரெண்டு படத்துக்குப் பிறகு மீண்டும் இணையும் மாதவன் - அனுஷ்கா!

2006-ல் மாதவனுடன் இணைந்து அனுஷ்கா நடித்த படம் - ரெண்டு. இதையடுத்து பலவருடங்களுக்குப் பிறகு...

Updated On : 31 ஜனவரி, 2024 at 6:53 AM
பகிர்:

தமிழ்த் திரையுலகில் தனது ஆரம்பக் கட்டத்தில் 2006-ல் மாதவனுடன் இணைந்து அனுஷ்கா நடித்த படம் - ரெண்டு. இதையடுத்து பலவருடங்களுக்குப் பிறகு மாதவன் - அனுஷ்கா ஜோடி மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளார்கள்.

மாதவன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கவுள்ள படத்தை ஹேமந்த் மதுக்கர் இயக்கவுள்ளார். இசை - கோபி சுந்தர். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகவுள்ள இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர்களும் தொழில்நுட்ப வல்லுநர்களும் பணியாற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச்சில் அமெரிக்காவில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, இந்த வருடமே படம் வெளியாகவுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →