செய்திகள்

இன்னும் 5 ஆண்டுகளில் இந்திய சினிமாவை தமிழ் சினிமாதான் ஆளும்! இயக்குநர் ராம் பேட்டி! (விடியோ)

கற்றது தமிழ், தங்க மீன்கள் எனப் படத்துக்குப் படம் தமிழ் ரசிகர்களின் பரவலான பாராட்டுகளைப் பெற்று வருபவர் இயக்குநர் ராம்.

உமா ஷக்தி.

கற்றது தமிழ், தங்க மீன்கள் எனப் படத்துக்குப் படம் தமிழ் ரசிகர்களின் பரவலான பாராட்டுகளைப் பெற்று வருபவர் இயக்குநர் ராம். இவரின் அடுத்தப் படமாக உருவாகியுள்ள பேரன்பு வெளிவருவதற்கு முன்பே பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பப்பட்டு திரைப்பட ஆர்வலர்களின் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. 

மம்மூட்டி, சரத்குமார், அஞ்சலி, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். தங்க மீன்கள் படப் புகழ் பேபி சாதனா மம்மூட்டியின் மகளாக நடித்துள்ளார். வைரமுத்து, கருணாகரன், சுமதி ராம் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படம் பிப்ரவரி 1 அன்று வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா எக்ஸ்பிரஸ் ரிலீங் இன் பகுதிக்காக இயக்குநர் ராம் அளித்த பேட்டியின் காணொளி இது. இதில் பேரன்பு படத்தைப் பற்றியும், மம்முட்டி, அஞ்சலி மற்றும் சாதனாவின் நடிப்பைப்ப் பற்றியும், வில்லன் இல்லாமல் ஒரு திரைக்கதையை உருவாக்கிய சிரமம் குறித்தும், இலக்கியம் மீது தனக்குள்ள ஈடுபாடு பற்றியும் விரிவாகப் பேசுகிறார் இயக்குநர் ராம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவில் வாகன விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் பலி !

காயத்தால் வெளியேறிய மெஸ்ஸி: பெனால்டியில் வென்ற இன்டர் மியாமி!

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

SCROLL FOR NEXT