‘பொன்னியன் செல்வன்’ கதையை இணையத் தொடராகத் தயாரிக்கிறார் செளந்தர்யா ரஜினிகாந்த்!
எம்எக்ஸ் பிளேயர், செளந்தர்யாவின் மே6 எண்டர்டெயிண்ட்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து பொன்னியின் செல்வனை...
கல்கி எழுதிய புகழ்பெற்ற நாவலான பொன்னியன் செல்வனை இணையத் தொடராகத் தயாரிக்கிறார் ரஜினியின் இளைய மகளான செளந்தர்யா.
இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. எம்எக்ஸ் பிளேயர், செளந்தர்யாவின் மே6 எண்டர்டெயிண்ட்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து பொன்னியின் செல்வனைச் சின்னத் திரையில் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளன. எம்எக்ஸ் பிளேயர் செயலியில் வெளியாகவுள்ள இந்த இணையத் தொடரை சூர்யபிரதாப் இயக்கவுள்ளார்.
பொன்னியின் செல்வனைப் படித்த நாள் முதல் அதைத் திரையில் கொண்டுவரவேண்டும் என முடிவெடுத்தேன். சூர்யபிரதாப் இயக்குவதில் மிக்க மகிழ்ச்சி என்று கூறியுள்ளார் செளந்தர்யா. இணையத் தொடர் பற்றிய விடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.