முகப்பு
செய்திகள்

புதுப்பேட்டை 2? மீண்டும் இணையும் அண்ணன் தம்பி!

சூர்யா நடிப்பில் இயக்குநர் செல்வராகனின் படம் என்ஜிகே ரசிகர்களின் மத்தியில் இரண்டு விதமான விமர்சனத்தை பெற்றது. 

Updated On : 3 ஜூலை 2019, 12:59 pm IST
பகிர்:


சூர்யா நடிப்பில் இயக்குநர் செல்வராகனின் படம் என்ஜிகே ரசிகர்களின் மத்தியில் இரண்டு விதமான விமர்சனத்தை பெற்றது.  செல்வராகவன் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடினர் ஆனால் சமூக வலைத்தளங்களில் படத்தை விமரிசனம் செய்தனர். 

இந்நிலையில், இயக்குநர் செல்வராகவன் தன் தம்பி தனுஷை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். தனுஷ் தயாரிப்பில் உருவாகவிருக்கும் செல்வராகவனின் புதிய படம் புதுப்பேட்டை இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்று கோலிவுட் வட்டாரத்தில் நம்பப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.