செய்திகள்

இந்த வாரம் ரிலீஸில் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் படங்கள் இவைதான்!

ஜூலை 19-ல் வெளியாக உள்ள படங்கள் கடாரம் கொண்டான், ஆடை, உணர்வு, சிதாரா மற்றும் தி லயன் கிங் ஆகியவை.

சினேகா

ஜூலை 19-ல் வெளியாக உள்ள படங்கள் கடாரம் கொண்டான், ஆடை, உணர்வு, K.R.மார்கெட் C/o தீனா மற்றும் ஆங்கில படமான 'தி லயன் கிங்' படத்தின் தமிழ் டப்பிங் ஆகியவை.

இவற்றுள் ரசிகர்களின் அதிக எதிர்ப்பார்ப்புக்கு உள்ளான படங்கள் மூன்று. முதலாவதாக, கடாரம் கொண்டான். நீண்ட இடைவெளிக்குப் பிறகு விக்ரம் நடிப்பில் வெளிவரும் படம் என்பதாலும், கமல் ஹாசனின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன் இப்படத்தில் நடிப்பதாலும் இப்படத்திற்கான எதிர்ப்பார்ப்பு அதிகம். 

இரண்டாவதாக ஆடை. மேயாத மான் படத்தை இயக்கிய ரத்னகுமாரின் இரண்டாவது படம்தான் ஆடை. ஜூலை 19 அன்று வெளிவருகிறது. அமலா பால் பிரதான வேடத்தில் நடித்துள்ளார். கடும் சர்ச்சைகளுக்குள் சிக்கிய இத்திரைப்படம் சென்ஸாரில் ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. படத்தின் காணொளியும் அதைத் தொடர்ந்து அமலா பாலின் பேட்டியும் பரபரப்பாக பேசப்பட்டது. ஆடை படத்தை தான் ஏன் தேர்வு செய்தேன் என்பதைப் பற்றியும் சர்ச்சைக்குள்ளான அக்காட்சியின் படப்பிடிப்பின் போது உடன் இருந்த 15 பேரையும் நம்பியதாக மனம் திறந்து கூறினார். 

கடைசியாக, தி லயன் கிங் படத்தை அசத்தும் தொழில்நுட்பத்தில் (மோஷன் கிராபிக்ஸ்) பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். தமிழ் வெர்ஷனில் அரவிந்த்சாமி, சித்தார்த், சிங்கம்புலி உள்ளிட்ட பலர் டப்பிங் பேசியிருப்பதாலும் இதற்கான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

2019-ம் ஆண்டைப் பொருத்தவரையில் இதுவரை எந்த படமும் இதுவரை பெரிய அளவில் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ஆடை அந்தப் பட்டியலில் சேருமா அல்லது ரசிகர்கள் விரும்பும் படமாக அமையுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.88.66 ஆக நிறைவு!

பிரதி மாதம் மாமன்றக் கூட்டத்தை நடத்த பாஜக வலியுறுத்தல்

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT