செய்திகள்

கர்ப்பமானால் என்ன குழந்தை பெற்றால் என்ன? நடிகையின் கேள்வி

'வாரணம் ஆயிரம்' புகழ் நடிகை சமீரா ரெட்டி அண்மையில் இரண்டாவது குழந்தைக்கு தாயானார்.

சினேகா

'வாரணம் ஆயிரம்' புகழ் நடிகை சமீரா ரெட்டி அண்மையில் இரண்டாவது குழந்தைக்கு தாயானார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போது நீச்சலுடையில் நீச்சல் குளத்தினுள் இருந்தபடி சில புகைப்படங்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். இது போன்ற துணிச்சலாக இளம் தாய்மார்கள் இருக்க வேண்டும் என்பதே சமீராவின் வாதம்.

அதனால்தான் அடிக்கடி தாய்மையை போற்றும் விதமாக போட்டோஷூட் எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வந்தார். அது பலரின் பாராட்டுக்களை அவருக்குப் பெற்றுத் தந்தாலும் சில சர்ச்சைகளுக்கும் வித்திட்டது.

அண்மையில் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்த சமீரா, தனது இன்ஸ்டாவில் குழந்தை பிறந்த செய்தியை படத்துடன் வெளியிட்டார், ‘இந்த குழந்தை காட்டு குதிரைகளின் வலிமையை எனக்குத் தருகிறாள். நான் மீண்டும் என்னைக் கண்டு அடைய வேண்டும் என்று அவள் விரும்பினாள். நான் தொலைந்து போனதை அவள் அறிந்திருந்தாள். அவள்தான் எனக்கு சரியான வழியைக் காட்டினாள். தாய்மையைக் கொண்டாடுவதில் நான் ஒரு அற்புதமான அனுபவத்தைக் கண்டேன். உடலைப் பற்றிய புரிதல் உணர்வில் ஒரு மாற்றத்தை விரும்பினேன், ஒவ்வொருவரும் தங்களுடைய தாய்மையை கொண்டாட வேண்டும் என்று குரல் கொடுக்க விரும்பி அதன்படி நடந்தேன். இப்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன், இதோ இந்த நிலைக்கு நான் வருவதற்கு என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி! நாங்கள் ஒரு பெண் குழந்தை வேண்டுமென பிரார்த்தனை செய்தோம், அது பலித்தது, நாங்கள் ஆசிரிவதிக்கப்பட்டுள்ளோம்’ என்று பதிவிட்டிருந்தார்.

மேலும் ஒரு பேட்டியில் அவர் கூறியது, 'என் உடலை  விமரிசிப்பவர்களை பார்த்து ஒன்று கேட்கிறேன். நீங்களும் ஒரு பெண் வயிற்றிலிருந்து தானே வந்தீர்கள்? பிரசவத்திற்கு பிறகு மீண்டும் ஹாட்டாக எப்போது மாறுவீர்கள் என்று உங்கள் அம்மாவைப் பார்த்து கேட்டீர்களா? கரீனா கபூர் போல எல்லோரும் பிரசவத்திற்கு பிறகும் கவர்ச்சியாக இருக்க மாட்டார்கள்’ என்று கூறினார் சமீரா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிங்டம் ஓடிடி தேதி!

அறிவியல் சார்ந்து, முற்போக்கு சிந்தனையோடு கல்வித்துறையை நடத்தி வருகிறோம் - Anbil Mahesh

இபிஎஸ்ஸுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

EPS செய்தது தவறான முன்னுதாரணமாக ஆகக் கூடாது! - எழிலன்

என் காதலன் எனக் கூறினால் ஏமாற வேண்டாம்: சின்ன மருமகள் நடிகை வேண்டுகோள்!

SCROLL FOR NEXT