செய்திகள்

பிரபாஸ் நடித்த சாஹோ: புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

சண்டைக்காட்சிகளின் படமாக்கத்தில் துல்லியத்தைக் கொண்டு வர முயற்சி செய்வதால்...

எழில்

பாகுபலி புகழ் நடிகர் பிரபாஸின் அடுத்தப் படம், ரூ. 150 கோடியில் உருவாகியுள்ள சாஹோ. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது. பாகுபலி 2 படத்துக்கு பிரபாஸ் நடிக்கும் படம் என்பதால் சாஹோ படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. யூவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு இசை - ஷங்கர்-இசான்-லாய். ஷ்ரதா கபூர், ஜாக்கி ஷெராப், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி போன்றோர் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் இந்தப் படம் ஆகஸ்ட் 15 அன்று வெளிவருவதாக இருந்தது. ஆனால் தற்போது ஆகஸ்ட் 30 அன்று வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சண்டைக்காட்சிகளின் படமாக்கத்தில் துல்லியத்தைக் கொண்டு வர முயற்சி செய்வதால் படத்தின் பணிகளை முடிக்க இன்னும் கால அவகாசம் தேவைப்படுகிறது. இதன் காரணமாக ஆகஸ்ட் 30-க்குப் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மஞ்சள் மோகினி... டெல்னா டேவிஸ்!

ஓவியம்... பிரியங்கா சௌத்ரி!

பாதுகாப்புத் துறை உயரதிகாரி பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக புகார்: தீவிர விசாரணை!

கம்பீரா பால விபத்து: 27 நாள்களாக அந்தரத்தில் தொங்கிய லாரி பாதுகாப்பாக மீட்பு!

Uttarakhand வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட மக்கள்! பதைபதைக்கும் காணொலி!

SCROLL FOR NEXT