செய்திகள்

ஹிட் அடித்த பாலிவுட் பட போஸ்டரை ‘பிட்’அடித்த பிகில்!

தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து அட்லி, விஜய் கூட்டணியில் பிகில் உருவாகி வருகிறது.

Raghavendran

தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து அட்லி, விஜய் கூட்டணியில் பிகில் உருவாகி வருகிறது. இதில் மெர்சலை அடுத்து ஏ.ஆர். ரஹ்மான் மீண்டும் இசை அமைக்கிறார். நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, விவேக், யோகிபாபு, கதிர் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

இதை அடுத்து விஜய் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை படக்குழுவினர் கடந்த மாதம் 21-ஆம் தேதி வெளியிட்டனர். பிகில் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் முடிவடையும் என்று தெரிகிறது.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘சிங்கப்பெண்ணே' பாடல் சமூக வலைதளங்களில் கசிந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் 'சிங்கப்பெண்ணே' பாடல் வரும் 23-ம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 

இது குறித்து ட்வீட் செய்துள்ள தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, 'சிங்கப்பெண்ணே' பாடல் நம் நாட்டின் ஒவ்வொரு மகள்களுக்கும் சமர்ப்பணம்’ என்று பதிவிட்டுள்ளார்.  

'சிங்கப்பெண்ணே' பாடல் அறிவிப்பை அடுத்து #Singappenney என்ற ஹாஷ்டேக் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்காக வெளியிடப்பட்ட புதிய போஸ்டர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கான் நடிப்பில் வெளியாகி மிகப் பெரிய அளவில் 'ஹிட்' அடித்த 'சக் தே இந்தியா' படத்தின் போஸ்டர் காட்சியை 'பிட்' அடித்தது போல் உள்ளதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலை விபத்தில் லேப் டெக்னீசியன் உயிரிழப்பு

மாமியாரை கத்தியால் குத்திய மருமகன் கைது

அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில் 2 போ் உயிரிழப்பு

இன்றைய மின்தடை: காவேரிப்பட்டணம்

சட்ட விரோதமாக அமிலம் பதுக்கல்

SCROLL FOR NEXT