செய்திகள்

உடற்பயிற்சி, டயட், ஆரோக்கியமான உணவு இவற்றில் அதிக கவனம் செலுத்துவேன்! மிஸ் இந்தியா அழகி சுமன் ராவ்!

சமீபத்தில் மிஸ் இந்தியா 2019-க்கான தேர்வு கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது.

DIN

சமீபத்தில் மிஸ் இந்தியா 2019-க்கான தேர்வு கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில் ராஜஸ்தான், ராஜ்ஸமந்த் பகுதியைச் சேர்ந்த சுமன் ராவ் என்பவர் மிஸ் இந்தியா பட்டத்தை வென்றுள்ளார். மற்ற போட்டியாளர்களில் சட்டீஸ்கரைச் சேர்ந்த ஷிவானி ஜாதவ் - மிஸ் கிராண்ட் இந்தியா 2019, பீகாரைச் சேர்ந்த ஸ்ரேயா ஷங்கர் - மிஸ் இந்தியா ஒருங்கிணைந்த கட்டமைப்பு 2019, மேலும் சஞ்சனா விஜ் - மிஸ் இந்தியா 2019 ரன்னராகவும் பட்டம் பெற்றுள்ளனர்.

சுமன் ராவ் பிறந்தது ராஜஸ்தான். வளர்ந்தது மும்பை. பி.காம் மற்றும் சாட்டர்ட் அக்கவுன்ட் முடித்திருக்கும் சுமன் படிப்பில் கெட்டியாம். அதே போன்று மாடலிங் மற்றும் கூடைப்பந்து விளையாட்டிலும் ஆர்வமுடையவர். எனவே, உடற்பயிற்சி, டயட், ஆரோக்கியமான உணவு இவற்றில் அதிக கவனம் செலுத்துவாராம். இதுவே தற்போது இவருக்கு மிஸ் இந்தியா பட்டத்தை பெற்றுத் தந்துள்ளது என்று சொல்லும் சுமன்ராவ் மேலும் கூறியதாவது: 'அப்பா தொழிலதிபர், அம்மா ஹோம் மேக்கர், இரண்டு சகோதரர்கள். எனக்கு சிறு வயதிலிருந்தே படிப்பு, விளையாட்டு, கலைகளில் ஆர்வம் உண்டு. எப்போதும் என்னை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளவேண்டும் என்று நினைப்பேன்.

கொஞ்சம் நேரம் கிடைத்தாலும் சினிமா மற்றும் இசையில் மூழ்கிவிடுவேன். முறைப்படி கதக் நடனமும் கற்றிருக்கிறேன். அது போன்று, ஆண் - பெண் சம உரிமைக்காக எப்போதும் குரல் கொடுப்பவள் நான். ஏனெனில் நானும் இந்த ஆண் - பெண் சம உரிமை கிடைக்காத சமூகத்தைச் சேர்ந்தவள்தான். எனவே, இந்த மனநிலையை மாற்ற நிச்சயம் முயற்சிப்பேன்.

தற்போது மிஸ் இந்தியா பட்டம் வென்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஆனாலும் எனது அடுத்த குறிக்கோள் 'மிஸ் வோர்ல்ட் 2019'. அதற்கு ஒரு படிக்கல். அடுத்தபடியாக டிசம்பர் மாதம் பேங்காக்கில் நடக்க இருக்கும் போட்டிக்கு தயாராகி வருகிறேன்' என்றார்.

மிஸ் இந்தியா 2019 பட்டம் மட்டுமின்றி இந்தப் போட்டியில் முதல் கட்ட சுற்றுகளில் சுமன் ராவ் "மிஸ் ராம்ப்வாக்' பட்டத்தையும் பெற்றிருப்பது கூறிப்பிடதக்கது.
 - ஸ்ரீ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரில் 3 துருப்பிடித்த பீரங்கி குண்டுகள் கண்டுபிடிப்பு

காந்தப் பார்வை... ஸ்ருஷ்டி பன்னாட்டி!

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

SCROLL FOR NEXT