பிறந்தநாளை முன்னிட்டு தனுஷின் புதிய பட 'முதல் பார்வை' வெளியீடு
பிறந்தநாளை முன்னிட்டு துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் 'முதல் பார்வை' வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை: பிறந்தநாளை முன்னிட்டு துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் 'முதல் பார்வை' வெளியிடப்பட்டுள்ளது.
'எதிர் நீச்சல்' மற்றும் 'கொடி' படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கி கொண்டிருக்கும் புதிய படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்து கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் தனுஷூக்கு இரட்டை வேடம் என்று தகவல்கள் வெளியாகின.
சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக தியாகராஜன் தயாரிக்கும் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக ஓம் பிரகாஷ் மற்றும் இசையமைப்பாளராக விவேக் மெர்வின் பணிபுரிகின்றனர்.
Advertisement
Advertisement
படத்தில் ஒரு ஹீரோயினாக நடிகை சினேகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இன்னொரு கதாநாயகி யார் என்று தெரியவில்லலை. இந்தப் படத்தில் திருடன் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிப்பதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் பிறந்தநாளை முன்னிட்டு துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் 'முதல் பார்வை' ஞாயிறு மாலை வெளியிடப்பட்டுள்ளது.
நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை வெளியிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.