செய்திகள்

இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் ஷூட்டிங் எப்போது? 

ஒரு கனவுப் படம். அதை நிறைவேற்ற சரியான திட்டமிடல், இப்படித்தான் இயக்குநர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இயக்க முடிவு செய்திருந்தார்.

சினேகா

ஒரு கனவுப் படம். அதை நிறைவேற்ற சரியான திட்டமிடல், இப்படித்தான் இயக்குநர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இயக்க முடிவு செய்திருந்தார். காலத்தில் நிலைத்த பொக்கிஷமான கல்கியின் பொன்னியின் செல்வனுக்கு உயிர் கொடுக்க, மறக்க முடியாத அக்கதாபாத்திரங்களை திரையில் உலவ விட அவர் கதாபாத்திரத் தேர்வை சில மாதங்கள் முன்பே முடித்து விட்டார். 

ஆதித்த கரிகாலனாக விக்ரம், பெரிய பழுவேட்டரையராக பார்திபன், சுந்தர சோழனாக சரத்குமார், வந்தியத் தேவனாக கார்த்தி, ராஜராஜனாக அதர்வா, குந்தவையாக அனுஷ்கா, வானதியாக ராஷி கன்னா, பூங்குழலியாக ரகுல் ப்ரீத் சிங், மற்றும் மிக முக்கியமாக நந்தினியாக ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்ட பலர் நடிக்கவிருக்கிறார்கள். ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், நாசர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். விஜய் சேதுபதியை நடிக்க கேட்டு அவர் தேதி இல்லாததால் அவரிடம் இருந்து ஒப்புதல் இதுவரை வரவில்லை. 

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை டிசம்பர் மாதம் துவங்க முடிவு செய்துள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார். இதுவரை இந்தியாவில் எடுக்கப்பட்ட படங்களில் அதிகமான திரை நட்சத்திரங்கள் நடிக்கும் மிகப் பிரமாண்டமான படமாக பொன்னியின் செல்வன் உருவாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லைக்கு 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்!

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT