முகப்பு
செய்திகள்

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவராக பாரதிராஜா தேர்வு

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவராக பாரதிராஜா போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்... 

Updated On : 10 ஜூன், 2019 at 12:59 PM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 1:37 PM

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவராக பாரதிராஜா போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

சென்னை வடபழனியில் இயக்குநர்கள் சங்கத்தின் பொதுக்குழு இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இயக்குநர்கள் சங்கத்தின் தலைவராக பாரதிராஜாவை நியமிக்கப் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாரதிராஜாவைத் தலைவராக்கும் தீர்மானத்துக்குப் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளார்கள்.  

இதையடுத்து, தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவராக பாரதிராஜா போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுவது வழக்கம்.  2017 ஜூலை மாதம், விக்ரமன் தலைமையிலான நிர்வாகிகளின் பதவிக் காலம் முடிவுக்கு வந்ததையடுத்து, புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடைபெற்றது. இயக்குநர் விக்ரமன் வெற்றி பெற்று இயக்குநர்கள் சங்கத்தின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது, தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவராக பாரதிராஜா போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.