முகப்பு
செய்திகள்

ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் ‘சரவணா ஸ்டோர்ஸ்’ உரிமையாளர்!

சரவணன் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தை ஜேடி - ஜெர்ரி இயக்கவுள்ளதாகத் தகவல்...

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:17 AM
பகிர்:

தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும் அந்நிறுவனத்தின் விளம்பங்களில் தோன்றி மக்களிடம் கவனம் பெற்றுள்ளவருமான சரவணன், விரைவில் தமிழ்ப் படமொன்றில் நடிக்கவுள்ளார். 

சரவணன் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தை ஜேடி - ஜெர்ரி இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உல்லாசம், விசில் ஆகிய படங்களை இருவரும் இயக்கியுள்ளார்கள். 

தான் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தை சரவணனே தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என்று சமீபத்தில் பேட்டியளித்தார் சரவணன். எனினும் இப்படம் குறித்து அதிகாரபூர்வமான தகவல் வெளிவரும்போது முழு விவரங்களையும் அறிந்துகொள்ளலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.