செய்திகள்

சென்னையை மழையால் மட்டுமே காப்பாற்ற முடியும்: ஹாலிவுட் நடிகர் லியானார்டோ டி காப்ரியோ வருத்தம்!

நான்கு ஏரிகள் வறண்டு போன பிறகு, இந்திய நாட்டின் தென்னிந்திய நகரமான சென்னை சிக்கலில் உள்ளது...

எழில்

பிரபல ஹாலிவுட் நடிகர் லியனார்டோ டி காப்ரியாவுக்கு சென்னையின் குடிநீர்ப் பிரச்னை குறித்து எப்படித் தெரியும் என்றுதான் ஆச்சர்யம் ஏற்படுகிறது. ஆனார் அவர் சென்னையில் நிலவும் தண்ணீர்ப் பிரச்னை குறித்து தன்னுடைய கருத்தைப் பதிவு செய்துள்ளார். 

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் நிலைகளாக பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம், புழல் ஆகிய ஏரிகள் திகழ்கின்றன. கடந்தாண்டு போதிய பருவ மழை இல்லாததால் மேற்கண்ட ஏரிகள் தற்போது முற்றிலும் வறண்டு போயுள்ளன. இதனால், சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் பிசிசி-யில் வெளியான செய்தியை வைத்து லியானார்டோ டி காப்ரியோ, தன்னுடைய இன்ஸ்டகிராம் பதிவில் கூறியுள்ளதாவது: ‘இந்த நிலைமையில் இருந்து சென்னையை மழையால் மட்டுமே காப்பாற்ற முடியும்’. (புகைப்படத்தில் உள்ள) கிணறு முற்றிலும் வறண்டு உள்ளது. நகரம் தண்ணீரில்லாமல் உள்ளது. நான்கு ஏரிகள் வறண்டு போன பிறகு, இந்திய நாட்டின் தென்னிந்திய நகரமான சென்னை சிக்கலில் உள்ளது. குடிநீருக்காக மக்கள் காலிக் குடங்களுடன் அரசு தரும் தண்ணீருக்காக வரிசையில் பல மணி நேரம் காத்திருக்கிறார்கள். தண்ணீர்ப் பிரச்னை காரணமாக ஹோட்டல்கள் மூடப்படுகின்றன. இந்தப் பிரச்னையை சரிசெய்ய அரசு அதிகாரிகள் யோசித்து வருகிறார்கள். ஆனால் சென்னை மக்கள் மழைக்காகத் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகிறார்கள் என்று தனது எண்ணங்களைப் பதிவு செய்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உருவானது சென்யார் புயல்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

SCROLL FOR NEXT