அருவி பட இயக்குநரின் 3-வது படம்: சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார்!
இப்படத்துக்கு வாழ் என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒளிப்பதிவு - ஷெல்லி, இசை - பிரதீப் குமார்...
கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படங்களைத் தயாரித்த நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக அருவி பட இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கும் படத்தைத் தயாரிக்கிறார்.
இப்படத்துக்கு வாழ் என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒளிப்பதிவு - ஷெல்லி, இசை - பிரதீப் குமார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
கடந்த வருட மே மாதம், ஆர்டி ராஜா தயாரிப்பில் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அந்தப் படத்தின் பெயரோ, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரோ இன்னும் வெளியாகாத நிலையில் அருண் பிரபு புருஷோத்தமனின் மூன்றாவது படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.