செய்திகள்

இனிமேல் 90 எம்எல் பத்தாது, அடுத்தது 180 எம்எல்: இயக்குநர் அனிதா உதீப் பேட்டி

இது ஜாலியான படம். இதை எதிர்த்துப் போராட்டம் செய்கிற அளவுக்கு படத்தில் ஒன்றும் கிடையாது...

எழில்

அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடித்துள்ள படம் 90 எம்.எல். படம் இரட்டை அர்த்த வசனங்களைக் கொண்டுள்ளதால் தணிக்கையில் ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. இசை - சிம்பு. இயக்குநர் அனிதா உதீப், இதற்கு முன்பு குளிர் 100 டிகிரி படத்தை இயக்கியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் புகழ்பெற்ற பிறகு ஓவியா நடித்து வெளியாகும் படம் மற்றும் இரட்டை அர்த்த வசனங்கள் போன்ற காரணங்களால் இப்படத்துக்கு அதிகக் கவனம் கிடைத்துள்ளது. உலகளவில் இந்தப் படம் 500 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இன்று வெளியான இந்தப் படம், பல திரையரங்குகளில் காலை 5 மணிக் காட்சியுடன் தொடங்கியுள்ளது. ரசிகர்களுடன் இணைந்து காலைக் காட்சியைக் கண்டுகளித்த இயக்குநர் அனிதா உதீப் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

இது ஜாலியான படம். இதை எதிர்த்துப் போராட்டம் செய்கிற அளவுக்கு படத்தில் ஒன்றும் கிடையாது. படம் பார்த்த ரசிகர்கள், படம் தாறுமாறாக இருப்பதாகக் கூறுகிறார்கள். மிகவும் சந்தோஷமாக விசில் அடித்து, கைத்தட்டிப் படத்தை ரசித்தார்கள். 90 எம்எல் படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும். அது 180 எம்எல். இனிமேல் 90 எம்எல் பத்தாது என நினைக்கிறேன் என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊர்க்காவலன் (பாகம்-2)

எப்ஸ்டீன் கோப்புகள்! ரஷிய பெண்ணுடன் உறவு; பில்கேட்ஸுக்கு பால்வினை நோய்?

விசில்

நிலம், நீர், நிழல்: தமிழ் இலக்கியங்களில் சூழலியல்

சட்டப்படி வீட்டில் எத்தனை கிலோ தங்கம் வைத்திருக்கலாம்?

SCROLL FOR NEXT