ஜிவி பிரகாஷ், ரைஸா வில்சன் நடிக்கும் காதலிக்க யாருமில்லை!
ஜிவி பிரகாஷ் - ரைஸா வில்சன் நடிக்கும் படத்துக்கு காதலிக்க யாருமில்லை என்று தலைப்பிடப்பட்டுள்ளது...
ஜிவி பிரகாஷ் - ரைஸா வில்சன் நடிக்கும் படத்துக்கு காதலிக்க யாருமில்லை என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
படத்தின் கதாநாயகனான ஜிவி பிரகாஷ் காதலிக்க யாருமில்லாமல் அவதிப்படுவார். இதனால் இந்த அருமையானத் தமிழ்த்தலைப்பு வைக்கப்பட்டுள்ளது என்று அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் கூறியுள்ளார். மூன்றில் ஒரு பங்கு படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
செந்தில், குரு சோமசுந்தரம், ராமர், ஆனந்த்ராஜ் போன்றோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள். ப்யார் பிரேமா காதல் படத்துக்குப் பிறகு ரைஸா கதாநாயகியாக நடிக்கும் படம் இது. ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.