ஆர்யா - சயீஷா திருமணக் கொண்டாட்டம்: புகைப்படங்கள் & விடியோ!
இந்தக் கொண்டாட்டத்தில் உறவினர்களுடன் சயீஷா நடனமாடும் விடியோவும் புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன...
பிரபல பாலிவுட் நடிகர்களான சாயிரா பானு, திலீப் குமாரின் உறவினரான சயீஷா, தமிழில் வனமகன் படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த் போன்ற தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். கஜினிகாந்த் படத்தில் ஆர்யாவின் ஜோடியாக நடித்த சயீஷாவுக்கு அவருடன் ஏற்பட்ட நட்பு, காதலாக மாறி, தற்போது திருமணமாக மலரவுள்ளது. இருவரும் தற்போது காப்பான் என்கிற கே.வி. ஆனந்தின் படத்திலும் நடித்துவருகிறார்கள்.
ஆர்யா (38) - சயீஷா (21) ஆகியோரின் காதல் திருமணம், மார்ச் மாதம் நடைபெறவுள்ளதாக காதலர் தினத்தன்று இருவரும் அறிவித்தார்கள்.
ஆர்யாவின் திருமண நிகழ்ச்சிகள் இன்றும் நாளையும் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளன. நேற்று முதல் திருமணக் கொண்டாட்டங்கள் ஆரம்பித்துவிட்டன. இந்தக் கொண்டாட்டத்தில் உறவினர்களுடன் சயீஷா நடனமாடும் விடியோவும் புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.