முகப்பு
செய்திகள்

ஏப்ரலில் வெளியாகவுள்ள எனை நோக்கி பாயும் தோட்டா: தயாரிப்பாளர் தகவல்!

கெளதம் மேனன் - தனுஷ் கூட்டணி மற்றும் பாடல்களால் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படம்...

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:20 AM
பகிர்:

கெளதம் மேனன் - தனுஷ் - எனை நோக்கி பாயும் தோட்டா...

ஞாபகம் உள்ளது தானே?

கெளதம் மேனன் - தனுஷ் கூட்டணி மற்றும் பாடல்களால் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அப்படத்தின் தயாரிப்பாளர் மதன் கூறியுள்ளார். அவர் ட்விட்டரில் கூறியுள்ளதாவது:

டிரெய்லர் தயார். பட வெளியீட்டுக்கு வேலைகள் செய்து வருகிறோம். எல்லாம் நல்லபடியாக நடந்தால் ஏப்ரலில் படம் வெளியாகலாம் என்று கூறியுள்ளார்.

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா, சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் - எனை நோக்கி பாயும் தோட்டா. இசை - தர்புகா சிவா. இதன் படப்பிடிப்பு 2016-ல் தொடங்கி, செப்டம்பர் 2018-ல் முடிந்தது. தணிக்கையில் இந்தப் படம் யு/ஏ பெற்றுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.