முகப்பு
செய்திகள்

தேர்தல் சமயத்தில் வெளியாகவுள்ள ‘பிஎம் நரேந்திர மோடி’ படம்!

பிஎம் நரேந்திர மோடி படம், ஏப்ரல் 12 அன்று வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் சமயத்தில் இந்தப் படம்...

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:23 AM
பகிர்:

பிரதமர் மோடியின் வாழ்க்கை தற்போது திரைப்படமாக உருவாகியுள்ளது. சந்தீப் எஸ் சிங் தயாரிப்பில் ஒமங் குமார் இயக்கத்தில் மோடி வேடத்தில் விவேக் ஓப்ராய் நடித்துள்ள பிஎம் நரேந்திர மோடி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் வரும் ஏப்ரல் மாதம் 12 அன்று வெளியாகவுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

மக்களவை பொதுத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஏப்ரல் 18- ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்தியா முழுக்க ஏப்ரல் 11 முதல் மே 19 வரை ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் பிஎம் நரேந்திர மோடி படம், ஏப்ரல் 12 அன்று வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் சமயத்தில் இந்தப் படம் அதிகக் கவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →