வெளியானது நயன்தாராவின் 'கொலையுதிர் காலம்' திரைப்பட டிரைலர்
நயன்தாராவின் நடிப்பில் உருவாகியுள்ள த்ரில்லர் வகைத் திரைப்படமான 'கொலையுதிர் காலம்' டிரைலர் வெளியாகியுள்ளது.
Updated On : 31 ஜனவரி, 2024 at 12:57 PM
சென்னை: நயன்தாராவின் நடிப்பில் உருவாகியுள்ள த்ரில்லர் வகைத் திரைப்படமான 'கொலையுதிர் காலம்' டிரைலர் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் 'லேடி சூப்பர் ஸ்டார்' என்று புகழப்படுபவர் நடிகை நயன்தாரா. பல்வேறு விதமான கதாபாத்திரங்களையும் ஏற்று திறம்பட நடித்து வருகிறார்.
இவர் இப்போது கமல்ஹாசனின் 'உன்னைப்போல் ஒருவன்' மற்றும அஜித்தின் 'பில்லா - 2' ஆகிய படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்கத்தில் ”கொலையுதிர் காலம்” என்ற திகில் படத்தில் நடித்துள்ளார்.
Advertisement
அவருடன் இந்தப் படத்தில் பிரதாப் போத்தன், பூமிகா, ரோகிணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் ட்ரைலர் சனிக்கிழமை இரவு வெளியாகியுள்ளது.