முகப்பு
செய்திகள்

கார்கில் போர் தொடர்புடைய ஹிந்திப் படத்தை இயக்குகிறார் விஷ்ணு வர்தன்!

விக்ரம் பத்ரா வேடத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கவுள்ளார். பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர்...

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:48 AM
பகிர்:

2003-ல் வெளியான குறும்பு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் விஷ்ணு வர்தன். கடைசியாக 2015-ல் யட்சன் என்கிற படத்தை இயக்கினார்.

கடந்த சில வருடங்களாக அவர் இயக்கும் படங்கள் பற்றி எந்தத் தகவலும் இல்லாத நிலையில், கடந்த வருடம் ஹிந்திப் படமொன்றை விஷ்ணு வர்தன் இயக்கும் தகவல் வெளியானது. இப்போது அதுகுறித்த தகவல்கள் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. கார்கில் போரில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர் விக்ரம் பத்ராவின் வாழ்க்கை வரலாறை ஹிந்திப் படமாக இயக்கவுள்ளார் விஷ்ணு வர்தன். 24 வயது விக்ரம் பத்ராவுக்கு பரம் வீர் சக்ரா விருது வழங்கி மத்திய அரசு கெளரவித்தது. 

ஷெர்ஷா என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் விக்ரம் பத்ரா வேடத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கவுள்ளார். பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் இப்படத்தின் இணை தயாரிப்பாளராக உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.