முகப்பு
செய்திகள்

வெளியானது சிவகார்த்திகேயனின்  'மிஸ்டர் லோக்கல்' பட ட்ரைலர் 

நடிகர் சிவகார்த்திகேயனின் 'மிஸ்டர் லோக்கல்' பட ட்ரைலரை ஞாயிறன்று படக்குழு வெளியிட்டுள்ளது.

Updated On : 6 மே, 2019 at 10:29 AM
mr local trailer our
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 1:20 PM

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் 'மிஸ்டர் லோக்கல்' பட ட்ரைலரை ஞாயிறன்று படக்குழு வெளியிட்டுள்ளது.

சீமராஜா படத்தைத் தொடர்ந்து 'சிவா மனசுல சக்தி' படப் புகழ்  இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் மிஸ்டர் லோக்கல். வேலைக்காரன் படத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா, சதீஷ், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.

Advertisement

சிவகார்த்திகேயனின் 34ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மிஸ்டர் லோக்கல் படத்தின் டீசர் பிப்ரவரி மாதம் வெளியானது.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் 'மிஸ்டர் லோக்கல்' பட ட்ரைலரை ஞாயிறன்று படக்குழு வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.