செய்திகள்

உலகளவில் அதிக வசூலைப் பெற்ற 2-வது படம்: அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் புதிய சாதனை!

2.78 பில்லியன் டாலர் (ரூ. 19,282 கோடி) வசூலைப் பெற்று முதலிடத்தில் உள்ள அவதார் படத்தின் இடத்தை விரைவில் அடையவுள்ளது....

எழில்

உலகளவில் 2 பில்லியன் டாலர் (ரூ. 13,875 கோடி) வசூலை விரைவாகப் பெற்ற படம் என்கிற பெருமையை அடைந்துள்ளது அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்.

அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் படத்தின் அடுத்தப் பாகமான அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் (Avengers: Endgame) படம் அதே படக்குழுவினரால் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. ராபர்ட் டெளனி ஜூனியர், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், மார்க் ருஃபல்லோ நடிப்பில் ஆந்தோனி ரூஸோ, ஜோ ரூஸோ இயக்கியுள்ளார்கள். ஏப்ரல் 26 அன்று வெளியானது.

இதுவரையிலான 2.18 பில்லியன் டாலர் (ரூ. 15, 121 கோடி) வசூலின் மூலம் உலகளவில் அதிக வசூலை அடைந்த படங்களில் 2-ம் இடத்தைப் பிடித்துள்ளது அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் படம். இதன்மூலம் 2.78 பில்லியன் டாலர் (ரூ. 19,282 கோடி) வசூலைப் பெற்று முதலிடத்தில் உள்ள அவதார் படத்தின் இடத்தை விரைவில் அடையவுள்ளது. இதையடுத்து வரும் நாள்களில் புதிய உலக சாதனை நிகழ்த்தப்படவுள்ளது.

11 நாள்களில் டைட்டானிக் படத்தின் ஒட்டுமொத்த வசூலைத் தாண்டியுள்ளது அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம். மேலும், இதற்கு முன்பு  2 பில்லியன் டாலர் வசூலை 47 நாள்களில் அடைந்த அவதார் படத்தின் சாதனையையும் பின்னுக்குத் தள்ளியுள்ளது. இதன் முந்தைய பாகமான அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார், படம் வெளியான ஏழு வாரம் கழித்து, உலகளவில் 2 பில்லியன் டாலர் வசூலித்தது.

அவதார், டைட்டானிக், ஸ்டார் வார்ஸ்: தி ஃபோர்ஸ் அவேகன்ஸ் (Star Wars: The Force Awakens), அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் ஆகிய நான்கு படங்கள் மட்டுமே 2 பில்லியன் டாலரை வசூலைத் தாண்டிய நிலையில், இந்த வெற்றிக்கோட்டை எட்டிய ஐந்தாவது படம் என்கிற பெருமையைப் பெற்றுள்ளது அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்.

உலகளவில் அதிகம் வசூலித்த படங்கள்

1. அவதார் - 2.78 பில்லியன் டாலர் (ரூ. 19,282 கோடி)

2. அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் - 2.18 பில்லியன் டாலர் (ரூ. 15, 121 கோடி)*
3. டைட்டானிக் - 2.18 பில்லியன் டாலர் (ரூ. 15, 121 கோடி)
4. ஸ்டார் வார்ஸ்: தி ஃபோர்ஸ் அவேகன்ஸ் - 2.1 பில்லியன் டாலர் (ரூ. 14,570 கோடி)

5. அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் - 2.04 பில்லியன் டாலர் (ரூ. 14154 கோடி)


(* = மே 5 வரையிலான வசூல்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என் வாழ்வைக் காதலிக்கிறேன்... எடின் ரோஸ்!

ரஜினி 173 படத்தை தனுஷ் இயக்குகிறாரா?

மெக்ஸிகோவில் GenZ போராட்டம்: காவல் துறையினருடன் மோதல்!

உதயநிதிக்கு ஆணவம் வேண்டாம்! - தமிழிசை

Big fan bro! சிம்புவின் இன்ஸ்டா பதிவு!

SCROLL FOR NEXT