செய்திகள்

மணி ரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் அமலா பால்!

இந்தப் படம் மற்றும் கதாபாத்திரங்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது...

எழில்

எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையை அடுத்ததாகப் படமாக்கவுள்ளார் இயக்குநர் மணி ரத்னம்.

செக்கச் சிவந்த வானம் படத்துக்கு அடுத்ததாக மணி ரத்னம் இயக்கவுள்ள இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ் போன்றோர் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தை லைகா நிறுவனமும் மெட்ராஸ் டாக்கீஸும் இணைந்து தயாரிக்கவுள்ளன.

வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, ஆதித்ய கரிகாலனாக விக்ரம், சுந்தர சோழராக அமிதாப் பச்சன், வல்லவராயன் பெரிய பழுவேட்டரையராக தெலுங்கு நடிகர் மோகன் பாபு, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவை நாச்சியாராக கீர்த்தி சுரேஷ் போன்றோர் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில் இந்த நடிகர்கள் குழுவில் அமலா பாலும் இணையவுள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. எனினும் எந்தப் பாத்திரத்தில் அவர் நடிக்கவுள்ளார் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. 

இந்தப் படம் மற்றும் கதாபாத்திரங்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழனி கோயில் உண்டியல் எண்ணிக்கை ரூ.1.46 கோடி

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

SCROLL FOR NEXT