செய்திகள்

இந்தியாவில் அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் படத்தின் இரு வார வசூல்!

எழில்

உலகளவில் 2 பில்லியன் டாலர் (ரூ. 13,875 கோடி) வசூலை விரைவாகப் பெற்ற படம் என்கிற பெருமையை சமீபத்தில் அடைந்த அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் படம் இந்தியாவில் முதல் இரு வாரங்களில் ரூ. 339 கோடி வசூலித்துள்ளது.

அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் படத்தின் அடுத்தப் பாகமான அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் (Avengers: Endgame) படம் அதே படக்குழுவினரால் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. ராபர்ட் டெளனி ஜூனியர், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், மார்க் ருஃபல்லோ நடிப்பில் ஆந்தோனி ரூஸோ, ஜோ ரூஸோ இயக்கியுள்ளார்கள். ஏப்ரல் 26 அன்று வெளியானது.

இதுவரையிலான 2.18 பில்லியன் டாலர் (ரூ. 15, 121 கோடி) வசூலின் மூலம் உலகளவில் அதிக வசூலை அடைந்த படங்களில் 2-ம் இடத்தைப் பிடித்துள்ளது அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் படம். இதன்மூலம் 2.78 பில்லியன் டாலர் (ரூ. 19,282 கோடி) வசூலைப் பெற்று முதலிடத்தில் உள்ள அவதார் படத்தின் இடத்தை விரைவில் அடையவுள்ளது. இதையடுத்து வரும் நாள்களில் புதிய உலக சாதனை நிகழ்த்தப்படவுள்ளது.

11 நாள்களில் டைட்டானிக் படத்தின் ஒட்டுமொத்த வசூலைத் தாண்டியுள்ளது அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம். மேலும், இதற்கு முன்பு  2 பில்லியன் டாலர் வசூலை 47 நாள்களில் அடைந்த அவதார் படத்தின் சாதனையையும் பின்னுக்குத் தள்ளியுள்ளது. இதன் முந்தைய பாகமான அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார், படம் வெளியான ஏழு வாரம் கழித்து, உலகளவில் 2 பில்லியன் டாலர் வசூலித்தது.

அவதார், டைட்டானிக், ஸ்டார் வார்ஸ்: தி ஃபோர்ஸ் அவேகன்ஸ் (Star Wars: The Force Awakens), அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் ஆகிய நான்கு படங்கள் மட்டுமே 2 பில்லியன் டாலரை வசூலைத் தாண்டிய நிலையில், இந்த வெற்றிக்கோட்டை எட்டிய ஐந்தாவது படம் என்கிற பெருமையைப் பெற்றுள்ளது அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்.

இந்தப் படம் இந்தியாவில் முதல் இரு வாரங்களில் கிட்டத்தட்ட ரூ. 339 கோடி வசூலித்துள்ளது. முதல் வாரம் ரூ. 261 கோடியும் அடுத்த வாரம் ரூ. 78 கோடியும் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் அதிகமாக வசூலித்த ஹாலிவுட் படம் என்கிற பெருமையை அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் அடைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு விசாரணை மே 15-க்கு ஒத்திவைப்பு

மாநில சிலம்பம் போட்டியில் சங்ககிரியைச் சோ்ந்த மாணவா்கள் வெற்றி

ஈரான் மீன்பிடிப் படகு கேரளத்தில் தடுத்து நிறுத்தம்: 6 தமிழா்களை கடலோர காவல் படை கைது செய்து விசாரணை

ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை: சிறிதளவே உயா்ந்தது சென்செக்ஸ்!

கல்வித் துறையில் தொடா் முன்னேற்றம், இந்தியாவை விக்சித் பாரத்க்கு நெருக்கமாகக் கொண்டு செல்கிறது: குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பெருமிதம்

SCROLL FOR NEXT