செய்திகள்

என் படத்தைத் திருடி..என்னையே நடிக்க வைத்து: 'அயோக்யா' திரைப்படம் குறித்து பார்த்திபன் ரகளை ட்வீட் 

DIN

சென்னை: 'என் படத்தைத் திருடி..என்னையே நடிக்க வைத்து' என்று சமீபத்தில் வெளியான அயோக்யா திரைப்படம் குறித்து நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் ட்வீட் செய்திருப்பது ரசிகர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் விஷால் நடித்து வெள்ளியன்று திரைக்கு வர வேண்டிய 'அயோக்யா' திரைப்படமானது எதிர்பாராத பிரச்னைகளின் காரணமாக, தாமதமாகி சனிக்கிழமை வெளியாகியது. இந்தப் படத்தில் நடிகரும் இயக்குநருமான பார்த்திபனும் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் 'என் படத்தைத் திருடி..என்னையே நடிக்க வைத்து' என்று சமீபத்தில் வெளியான அயோக்யா திரைப்படம் குறித்து நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் ட்வீட் செய்திருப்பது ரசிகர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஞாயிறன்று வெளியிட்ட தொடர் பதிவுகளில் தெரிவித்துள்ளதாவது:

'அயோக்கியா'த்த்தனம்! 94-ல் வெளியான என் ginal ginal original 'உள்ளே வெளியே'படத்தை In&out லவுட்டிTemper'(Rights பெறாமல்) தெலுங்கில் Hit ஆக்கி தமிழிலும் தற்போது!அதில் என்னையும் நடிக்க வைத்து என்ன ஒரு'அ-தனம்'?குற்ற உணர்ச்சி இல்லாமல் எப்படி?வழக்கு செய்யாமல்,பெருமையுடன் பதிவிடுகிறேன

ஒப்பீட்டால் ரிப்பீட்டாகும் audience! 'அயோக்கியா'-என் பதிவு ஒரு விளம்பர யுத்தி என்பதை யாராவது கண்டுபிடித்து விடுவார்களோ என யோசித்துக் கொண்டிருந்தேன்.Goodவேளை! 'Temper'வரும்போது தெரியாது, தமிழாகும் போது தெரியும்.இதை கூடிப்பேசி கூத்தடிப்போம் Shooting spot-ல்.Mr vishalக்கும் எனக்கும்

Mr vishalக்கும் எனக்கும் என்றுமே பிரச்சனை இல்லை! இப்போதும் வழக்காட வரவில்லை. வழக்கமான என் (100%உண்மையான)அக்மார்க் அக்குறும்பே!கெட்ட போலீஸ்,ஒரு நல்ல போலீஸால் திருந்துவதன் விளை(யும்)வுகள்!இந்த மையக் கரு இரண்டிலும் ஒன்றே!Doubt-ன்னா பாருங்க ....yeah AYOGYA!

இவ்வாறு அவர் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் வாக்களிக்காதது ஏன்?: ஜோதிகா விளக்கம்!

கண் அழைக்குது..!

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

SCROLL FOR NEXT