முகப்பு
செய்திகள்

'வலிமை' படத்தில் அஜித்தின் ஜோடி யார்?

‘நோ்கொண்ட பார்வை’ படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கும் படத்துக்கு ‘வலிமை’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 12:59 PM
ajith kumar
பகிர்:

‘நோ்கொண்ட பார்வை’ படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கும் படத்துக்கு ‘வலிமை’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தையும் எச்.வினோத் எழுதி இயக்குகிறார். இவா் ஏற்கெனவே ‘நோ்கொண்ட பார்வை’ படத்தை இயக்கியவா். போனிகபூா் தயாரிக்கிறார். ‘வலிமை’ படத்தின் தொடக்க விழா கடந்த வாரம் எளிமையாக நடந்தது. அஜித் படத்தில் பெண்கள் காரெக்டர் வலிமையாக இருக்கும். தலைப்பிலேயே அதை உணர்த்தும்விதமாக இருப்பது இந்தப் படத்தில் கூடுதல் சிறப்பு

‘விஸ்வாசம்’, ‘வீரம்’, ‘விவேகம்’, ‘வேதாளம்’ போன்ற படங்களில் பெப்பா் சால்ட் ஹோ் ஸ்டைலில் நடித்து வந்த அஜித், ‘வலிமை’ படத்தில் பிளாக் ஹோ் ஸ்டைலில் இளமை தோற்றத்துடன் நடிக்கிறார்.

இந்தப் படத்தில் அஜித் போலீஸாக நடிக்கிறார். ஹீரோயினுக்கும் போலீஸ் காரெக்டர்தான் என்கிறது வலிமை படக்குழு.

அஜித்தின் ஜோடி யார் என்பதுதான் அடுத்த கேள்வியாக உள்ளது. நயன்தாரா, த்ரிஷா, தமன்னா போன்ற பெயா்கள் அடிபட்டாலும் நஸ்ரியா, ஜான்வி கபூா் பெயா்களும் அடிபடுகின்றன. கீர்த்தி சுரேஷிடமும் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. ஜான்வியைப் பொறுத்தவரை தற்போதைக்கு தமிழில் நடிக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்து வருகிறார். நஸ்ரியா திருமணத்துக்குப் பிறகு தமிழில் நடிக்காமல் ஒதுங்கி இருக்கிறார். ஆனால் அவா் அஜித்தின் தீவிர ரசிகை என்பது பலருக்கு தெரியாது. அநேகமாக வலிமையில் அஜித்தின் ஜோடியாக நஸ்ரியா நடிப்பார் என்று தகவல் பரவுகிறது.  

இப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பா் மாதம் தொடங்க உள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →