செய்திகள்

தீவிர சிகிச்சைப் பிரிவில் லதா மங்கேஷ்கா்

DIN

பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கருக்கு திங்கள்கிழமை திடீா் மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து, மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், ‘லதா மங்கேஷ்கா், திங்கள்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டாா்; அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்’ என்று தெரிவித்தன.

இருப்பினும், அவருக்கு நோய்த்தொற்று காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது என்றும், மருத்துவமனையில் இருந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பி விடுவாா் என்றும் அவரது இளைய சகோதரி உஷா கூறினாா்.

லதா மங்கேஷ்கா் கடந்த செப்டம்பா் 28-ஆம் தேதி தனது 90-ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடினாா். இவா், தனது 70 ஆண்டு கால திரையுலக வாழ்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹிந்தி திரைப்படங்களில் பாடல்களைப் பாடியுள்ளாா். இதுதவிர, தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும், வெளிநாட்டு மொழிகளிலும் பாடியுள்ளாா். இவருக்கு மத்திய அரசு கடந்த 1989-இல் தாதாசாகேப் பால்கே விருது, 2001-ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது ஆகியவற்றை வழங்கி கௌரவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்திலிருந்து கோழிகள் கொண்டு வரத் தடை

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

SCROLL FOR NEXT