செய்திகள்

விஜய் சேதுபதி நடித்த சங்கத் தமிழன் படத்தின் வெளியீட்டுக்கு நெல்லையில் தடை விதிப்பு

நாளை முதல் நவம்பர் 21 வரை நெல்லை மாநகரத்தில் சங்கத் தமிழன் படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எழில்

விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் சங்கத் தமிழன். விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் போன்றோர் நடித்துள்ளார்கள்.

விவேக் மெர்வின் இசையமைத்துள்ள இப்படம் நாளை வெளியாகவிருந்தது. இந்நிலையில் லிப்ரா நிறுவனத்துக்கு எதிராக விநியோகஸ்தர் விக்னேஸ்வரன் தொடர்ந்துள்ள வழக்கில் நாளை முதல் நவம்பர் 21 வரை நெல்லை மாவட்டத்தின் 10 திரையரங்குகளில் சங்கத் தமிழன் படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

2013-ல் நளதமயந்தி படத்தை வெளியிட லிப்ரா நிறுவனம் விக்னேஷ் பிக்சர்ஸிடம் கடனாகப் பெற்ற ரூ. 15 லட்சத்தைத் திருப்பித் தராததால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. படத்தை ஒரு வாரத்துக்கு நெல்லை மாவட்டத்தில் வெளியிடத் தடை விதிக்கப்பட்டதோடு பணத்தை உடனடியாகத் திருப்பித் தரவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

றெக்கை இல்லாத தேவதை... கீர்த்தி சனோன்!

எல்லையில் பதற்றம்! பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு - சண்டை நிறுத்தம் மீறல்!

உயிர்த்தெழும் ஓவியமே... ப்ரீத்தி சர்மா!

வங்கதேசத்தில் 2026 பிப்ரவரியில் பொது தேர்தல்! இடைக்கால அரசு அறிவிப்பு!

அனில் அம்பானியிடம் 9 மணி நேரம் விசாரணை: பிடியை இறுக்கும் அமலாக்கத் துறை!

SCROLL FOR NEXT