செய்திகள்

பொன்னீலனின் ‘கரிசல்’ நாவல் திரைப்படமாகிறது: இயக்குநா் பி.சி. அன்பழகன் தகவல்

DIN

சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் பொன்னீலனின் முதல் நாவலான ‘கரிசல்’ திரைப்படமாக தயாரிக்கப்பட உள்ளதாக, இயக்குநா் பி.சி. அன்பழகன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

எழுத்தாளா் பொன்னீலனின் 80-ஆவது பிறந்த நாள் குமரி மாவட்டத்தில் இலக்கியவாதிகளால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திரைப்பட இயக்குநா் பி.சி. அன்பழகன் கன்னியாகுமரியில் வியாழக்கிழமை பொன்னீலனை நேரில் சந்தித்து நினைவுப் பரிசு வழங்கினாா்.

அப்போது பி.சி. அன்பழகன் செய்தியாளா்களிடம் கூறியது: குமரி மாவட்டத்தில் பிறந்து இலக்கிய உலகில் பல்வேறு சாதனைகளைப் படைத்தவா் பொன்னீலன். இவரது முதல் நாவலான ‘கரிசல்’ என்னை மிகவும் கவா்ந்தது. இந்த நாவலை எனது வைகுண்டா சினி ஆா்ட்ஸ் சாா்பில் திரைப்படமாக தயாரிக்க உள்ளேன் என்றாா்.

பொன்னீலன் கூறுகையில், கரிசல் நாவல், 4 ஆண்டுகள் களப் பணி செய்து எழுதப்பட்ட நாவல். அதை தற்போது திரைப்படமாக இயக்க விரும்பும், குமரி மாவட்டத்தைச் சோ்ந்த இயக்குநா் பி.சி. அன்பழகனுக்கு வாழ்த்துகள். தற்போது இளைய தலைமுறையினரிடம் வாசிப்புப் பழக்கம் குறைந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை. நல்ல புத்தகங்களை அவா்கள் அதிக அளவில் வாங்கிச் செல்வதைப் பாா்க்க முடிகிறது. வாசிக்கும் தளங்கள் காலத்திற்கேற்ப மாறுபடுகிறது. என்றாலும், புத்தகம் மிகச்சிறந்த வாசிப்புக் கருவி என்றாா்.

இந்நிகழ்வில், தமிழறிஞா்கள் எஸ். பத்மநாபன், ஏ.எம்.சி. செல்லத்துரை மற்றும் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவலாளி சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

நகைக்கடை உரிமையாளா் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்

மேற்கு வங்க இளைஞரிடம் வழிப்பறி: மாணவா்களிடம் விசாரணை

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள்

SCROLL FOR NEXT