செய்திகள்

இந்த வாரம் வெளியாகவுள்ள ஐந்து தமிழ்ப் படங்கள்

எழில்

கடந்த வாரம் சங்கத் தமிழன், ஆக்‌ஷன் என இரு புதிய தமிழ்ப் படங்கள் வெளிவந்தாலும் இன்னமும் பிகில், கைதி படங்கள் தான் மக்களின் அதிக வரவேற்புக்கு மத்தியில் தொடர்ந்து அதிக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த வாரம் நவம்பர் 22 அன்று ஐந்து தமிழ்ப் படங்கள் வெளியாகவுள்ளன.

ஆதித்ய வர்மா, கே.டி.  (எ) கருப்புதுரை, பேய் வாலை பிடிச்ச கதை, மேகி, பணம் காய்க்கும் மரம் என ஐந்து தமிழ்ப் படங்கள் வெளியாகும் என அறியப்படுகிறது. இதில் துருவ் விக்ரம் நடித்த ஆதித்ய வர்மா, வார இறுதி நாள்களில் நல்ல வசூலைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அர்ஜூன் ரெட்டி என்கிற தெலுங்குப் படம் 2017-ல் வெளியாகி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது. விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் சந்தீப் வங்கா இயக்கிய படத்துக்கு நல்ல விமரிசனங்கள் கிடைத்தது மட்டுமல்லாமல் வசூலிலும் அசத்தியது. 

இந்தப் படம் தமிழில் ஆதித்ய வர்மா என்கிற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. சந்தீப் வங்காவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கிரீசாயா இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். ஏழாம் அறிவு படத்துக்குப் பிறகு ரவி கே. சந்திரன் தமிழில் மீண்டும் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். கடந்த வருடம் வெளியான ஹிந்திப் படமான அக்டோபர் படத்தில் அறிமுகமாகிக் கவனம் பெற்ற பனிதா சந்து கதாநாயகியாக நடித்துள்ளார். பனிதா, லண்டனில் பிறந்த பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்தவர். ப்ரியா ஆனந்தும் இப்படத்தில் நடித்துள்ளார். இசை - ரதன். இது அவருடைய 4-வது தமிழ்ப்படம். விகடகவி, வாலிபராஜா, டார்லிங் 2 ஆகிய படங்களுக்கு ரதன் இசையமைத்துள்ளார். தயாரிப்பு - ஈ4 எண்டர்டெயிண்ட்மெண்ட்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாய் சுதர்ஷன், ஷாருக்கான் அதிரடி: பெங்களூருவுக்கு 201 ரன்கள் இலக்கு!

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

அமெரிக்கா: இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்தக்கோரி போராட்டம்

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

SCROLL FOR NEXT