செய்திகள்

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்குச் சிறப்பு விருது வழங்கப்பட்டது!

எழில்

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சா்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 50-ஆவது சா்வதேச திரைப்பட விழா கோவாவில் இன்று முதல் 28-ம் தேதி வரை 9 நாள்கள் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம், தகவல் ஒலிபரப்புத் துறைகளின் அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், ரஜினி, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பிரபலங்கள் கோவா திரைப்பட விழாவை இன்று தொடங்கிவைத்தார்கள்.  

சா்வதேசத் திரைப்பட விழாவுக்கு இந்த ஆண்டு பொன்விழா என்பதால் இந்திய சினிமாவுக்கு முக்கிய பங்களிப்பு செய்த திரைப்பட கலைஞா்களை கெளரவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 50-ஆவது ஆண்டு சா்வதேச திரைப்பட விழாவின் கெளரவ விருதை நடிகா் ரஜினிகாந்துக்கு வழங்குவதாக அறிவித்தது மத்திய அரசு. ‘ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி’ என்ற விருது இன்று ரஜினிக்கு வழங்கப்பட்டது. ரஜினிக்கு இந்த விருதை பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் வழங்கினார். விருது வழங்குவதற்கு முன்பு ரஜினி குறித்த குறும்படம் ஒன்று விழா அரங்கில் திரையிடப்பட்டது. 

இந்த விழாவில் பேசிய ரஜினி, இந்த விருதை வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தார். தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், ரசிகர்களுக்கு இந்த விருதைச் சமர்ப்பிக்கிறேன் என்றும் கூறினார். பிறகு, என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி என்று கடைசியாக தமிழில் பேசி தனது உரையை முடித்துக்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

SCROLL FOR NEXT