முகப்பு
செய்திகள்

பிறந்த நாள் கொண்டாட்டம்.. அமெரிக்காவில் நயன்தாரா!

நயன்தாரா தனது பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக அமெரிக்கா சென்றுள்ளார். காதலர் விக்னேஷ் சிவனும் அமெரிக்கா சென்றுள்ளார்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:16 PM
பகிர்:

நயன்தாரா தனது பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக அமெரிக்கா சென்றுள்ளார். காதலர் விக்னேஷ் சிவனும் அமெரிக்கா சென்றுள்ளார்.

அமெரிக்காவில் இருந்து திரும்பியதும், ஆர்.ஜே.பாலாஜி எழுதி, இயக்கி, நடிக்கவுள்ள "மூக்குத்தி அம்மன்' படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அவர் அம்மனாக நடிக்கிறார். இதற்காக அவர் தற்போது கடும் விரதத்தில் இருக்கிறாராம்.

ஆர். ஜே. பாலாஜி கதை சொன்னதும், "இந்தப் படத்தில் நான் முழுமையாக நடிக்க இருக்கிறேன். அதற்காக விரதம் இருக்கப் போகிறேன்'' என்று தெரிவித்திருக்கிறார்.

ஏற்கெனவே தெலுங்கில் நடித்த "ராமராஜ்யம்' படத்தில் சீதையாக நடிப்பதற்கு விரதம் மேற்கொண்டார் நயன்தாரா. அப்போது அவர் சீதையாக நடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியிருந்தது.

"மூக்குத்தி அம்மன்' படக்குழுவினரையும் விரதம் இருக்க அறிவுறுத்தி இருக்கிறாராம் நயன்தாரா.

முழு கட்டுரையைப் படிக்க →