முகப்பு
செய்திகள்

‘சரவணா ஸ்டோர்ஸ்’ உரிமையாளருடன் இணைந்து நடிக்கவில்லை: செய்திகளுக்கு நடிகை ஹன்சிகா மறுப்பு!

நான் நடிக்கும் படங்கள் குறித்து என்னிடம் உறுதி செய்துவிட்டு, செய்தி வெளியிடுங்கள் என்று ஊடகங்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 10:17 AM
பகிர்:

தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும் அந்நிறுவனத்தின் விளம்பங்களில் தோன்றி மக்களிடம் கவனம் பெற்றுள்ளவருமான அருள், விரைவில் தமிழ்ப் படமொன்றில் நடிக்கவுள்ளார். அருள் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தை ஜேடி - ஜெர்ரி இயக்கவுள்ளார்கள். தான் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தை அருளே தயாரிக்கவுள்ளார். 

இந்நிலையில் இந்தப் படத்தில் அருளுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதற்கு ஹன்சிகா மறுப்பு தெரிவித்துள்ளார். நான் நடிக்கும் படங்கள் குறித்து என்னிடம் உறுதி செய்துவிட்டு, செய்தி வெளியிடுங்கள் என்று ஊடகங்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.