செய்திகள்

தமிழில் பிகில், தெலுங்கில் விசில்: வெளியானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படத்தின் தெலுங்கு டைடில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. 

DIN

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படத்தின் தெலுங்கு டைடில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. 

ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குநர் அட்லி அடுத்ததாக விஜய் கதாநாயகனாக நடிக்கும் பிகில் படத்தை இயக்கியுள்ளார். மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி - ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணி இந்தப் படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. 

இப்படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் போன்றோர் நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் - விவேக், படத்தொகுப்பு - ரூபன் எல். ஆண்டனி, கலை - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு. 

தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதி நடைபெற்றது. 

அதேசமயம், இப்படத்தின் தெலுங்கு உரிமையை ஈஸ்ட் கோஸ்ட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றியது. இந்நிலையில், தெலுங்கு மொழியில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இன்று வெளியிட்டார். 

அதன்படி இதற்கு தெலுங்கில் விசில் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சரக்கு வேன் கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

திருமால் கிராம கல் குவாரிக்கான அனுமதியை ரத்து செய்யக் கோரி மனு

பிகாரில் தேர்தல் கூட்டணிகளின் பலம் - பலவீனம்! ஓர் ஆய்வு

மலைவாழ் மக்களின் உரிமைகளை மத்திய அரசு சிதைக்கிறது: ஜிதேந்திர சௌத்ரி

பெட்ரோல் வாகனங்களுக்கு நிகராக மின்சார வாகனங்கள் விலை குறையும்: மத்திய அமைச்சா்

SCROLL FOR NEXT