Bigg boss 
செய்திகள்

பிக் பாஸ் சீசன் - 3 டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றார் முகேன்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன்-3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் பட்டத்தை முகேன் பெற்றுள்ளார். 

DIN

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன்-3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் பட்டத்தை முகேன் பெற்றுள்ளார். 

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன்-3 நிகழ்ச்சி கடந்த ஜூன் 23ம் தேதி தொடங்கி, 105 நாட்களுடன் இன்றுடன் முடிவடைகிறது. 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில், தற்போது 100 நாட்களைக் கடந்து பிக் பாஸ் வீட்டில் இறுதிப் போட்டியாளர்களாக முகேன், லாஸ்லியா, சாண்டி, ஷெரின் ஆகிய 4 போட்டியாளர்கள் இருந்தனர். 

இன்று மாலை 6 மணிக்கு விஜய் டிவியில் டைட்டில் வின்னரை அறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. டைட்டில் வின்னர் பட்டத்தைப் பெறப்போவது யார்? என்று பரபரப்பாகப் பேசப்பட்ட நிலையில், இறுதியாக முகேன் இந்தப் பட்டத்தைப் பெற்றுள்ளார். நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல் ஹாசன்  இதனை அறிவித்துள்ளார். 

ஏற்கனவே, பிக் பாஸ் சீசன்- 3 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் பட்டத்தை முகேன் தான் பெறுவார் என்று சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முகேனைத் தொடர்ந்து, இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை முறையே சாண்டி மற்றும் லாஸ்லியா பெற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

SCROLL FOR NEXT