முகப்பு
செய்திகள்

கமகமக்கும் பிரியாணியை காதலருக்காக சமைத்த நடிகை

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். இவருடைய காதலரின் பெயர் இஷான் கட்டார்.

Updated On : 17 அக்டோபர், 2019 at 12:04 PM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 3:54 PM

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். இவருடைய காதலரின் பெயர் இஷான் கட்டார். இவரும் நடிகர்தான். பாலிவுட்டின் பிரபல நடிகர் ஷாகித் கபூரின் தம்பிதான் இஷான்.  'தடக்' என்ற இந்திப் படத்தில்தான் இந்த ஜோடி திரையில் அறிமுகமானர்கள். மராத்தியில் வெளியாகி வெற்றி பெற்ற 'சாய்ரத்' என்ற படத்தின் ஹிந்தி ரீமேக்தான் 'தடக்' . இந்தப் படம் பெரியளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் ஜான்வி இஷான் ஜோடி ரசிகர்களிடையே பிரபலமானது. இஷான் தற்போது புதிய ஹிந்திப் படமொன்றில் நடிக்கவிருக்கிறார். ஜான்வியும் இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


ஜான்வி - இஷான் ஜோடி இன்ஸ்டாகிராம் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அடிக்கடி தங்கள் படங்களை வெளியிடுவதும், பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாக கலந்து கொள்வதாலும் ஹிந்தி மீடியாவில் இவர்கள் காதலித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. ஜான்வியுடன் காதலா என்று இஷானிடம் கேட்ட போது, 'நாங்கள் நல்ல நண்பர்கள். இதனால்தான் ஒன்றாக பல இடங்களுக்கு செல்கிறோம். ஜான்வி அதிகமாக தென்னிந்திய பாடல்களை கேட்பதால், எனக்கு தற்போது அந்தப் பாடல்கள் பிடித்துள்ளன’ என்று பதில் அளித்துள்ளார் இஷான்.

அண்மையில் ஜான்வி இஷான் கட்டர், ஷாகித் கபூர் மற்றும் ஷாகித் மனைவி மிரா ராஜ்புட் ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார். அவர்களுடன் சேர்ந்து மதிய உணவை சமைத்துள்ளார். ரெட் ரைஸ் எனப்படும் சிவப்பு அரிசியில் இந்த பிரியாணியை சமைத்த ஜான்வி கபூர், காதலருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் பரிமாறியுள்ளார். ஜான்வி சமைத்த பிரியாணியை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த மிரா ராஜ்புட், சிவப்பு அரிசியில் பிரியாணி சமைத்துள்ள ஜான்விக்கு பாராட்டுகளைத் தெரிவிக்குமாறும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.